பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2016 | 12:06 pm

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

சிவநேசதுறை சந்திகாந்தனை இன்று (27) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பிலான விசாரணைகளுக்காக கடந்த ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்