தொடர் வீழ்ச்சியை சந்தித்துள்ள கொழும்பு பங்குச்சந்தை

தொடர் வீழ்ச்சியை சந்தித்துள்ள கொழும்பு பங்குச்சந்தை

எழுத்தாளர் Bella Dalima

27 Jan, 2016 | 7:39 pm

கொழும்பு பங்குச்சந்தை தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.

சுமார் ஒரு வருட காலமாக பங்குச்சந்தையில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சி காரணமாக தாம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக முதலீட்டாளர்கள் தெரிவித்தனர்.

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் கடந்த ஒரு வருட காலத்தில் 1300 அலகுளால் குறைவடைந்தது. அது 17 வீத வீழ்ச்சியாகும்.

ஒரு வருடத்திற்கு முன்னர் ஒரு இலட்சம் ரூபா முதலீடு செய்தவர்களுக்கு, தற்போது 25,000 ரூபா நட்டம் ஏற்படுவதாக முதலீட்டாளர்கள் தெரிவித்தனர்.

எனவே, பங்குச் சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு அரசாங்கம் திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும் என முதலீட்டாளர்கள் வலியுறுத்தினர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்