சிறுநீரக கடத்தல் குறித்து இந்திய அரசு எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை

சிறுநீரக கடத்தல் குறித்து இந்திய அரசு எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை

சிறுநீரக கடத்தல் குறித்து இந்திய அரசு எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2016 | 7:39 am

சிறுநீரக கடத்தல் தொடர்பில் இந்திய அரசினால் எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை என இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எசல வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் இடம்பெற்ற சிறுநீரக கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய ஊடகங்களால் செய்திகள் வெளியிடப்பட்டன.

இதனை கருத்திற்கு கொண்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதன் பிரகாரம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட உதவி பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு ஒப்படைப்படக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்