சம்பூரில் பாழடைந்த கிணற்றிலிருந்து 6 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் தீவிரம்

சம்பூரில் பாழடைந்த கிணற்றிலிருந்து 6 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் தீவிரம்

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2016 | 11:41 am

திருகோணமலை சம்பூர் பகுதியில் 6 வயது சிறுவனொருவன், கல்லில் கட்டப்பட்ட நிலையில் பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

விசாரணைகளுக்காக 4 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பூர் 7 ஆம் வட்டார பகுதியை சேர்ந்த 6 வயதான குகதாஸ் தர்சன் என்ற பாலகனே நேற்று சடலமாக மீட்கப்பட்டான்.

சிறுவன் காணாமற்போனதையடுத்து சம்பூர் பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்ததுள்ளனர் அதனைத் தொடர்ந்து பொலிஸாரின் உதவியுடன் சிறுவனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், நேற்று  குறித்த சிறுவன் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டது.

சம்பூர் கடற்படை முகாமிற்கு அருகில் காணப்படும் காணியொன்றிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இதேவேளை, சிறுவனின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதான குகதாஸ் தர்சனின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்