ஐக்கிய நாடுகள் சபையின் சிரியாவிற்கான அமைதிப் பேச்சுவார்த்தை விரைவில்

ஐக்கிய நாடுகள் சபையின் சிரியாவிற்கான அமைதிப் பேச்சுவார்த்தை விரைவில்

ஐக்கிய நாடுகள் சபையின் சிரியாவிற்கான அமைதிப் பேச்சுவார்த்தை விரைவில்

எழுத்தாளர் Bella Dalima

27 Jan, 2016 | 3:06 pm

சிரியாவில் இடம்பெற்றுவரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி தொடங்கும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

சிரியாவிற்கான அமைதிப் பேச்சுவார்த்தையில் எதிர்க்கட்சிகள் சார்பில் யார் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம் என்பதில், தொடர்புடைய நாடுகளிடையே கருத்து வேறுபாடு நீடிப்பதாகவும் திங்கட்கிழமை தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்த அமைதிப் பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை தொடங்கும் எனவும் சிரியாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதுவர் ஸ்டெபான் டி மிஸ்டுரா (Staffan de Mistura) தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் சார்பில் யாருக்கு அழைப்பு விடுப்பது என்பதில், அமைதி முயற்சியை மேற்கொண்டுள்ள அமெரிக்கா, ரஷ்யா, சவுதி அரேபியா, ஈரான் உள்ளிட்ட 17 நாடுகளுக்கிடையேதான் கருத்து வேறுபாடு நீடித்து வருகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்