எம்பிலிப்பிட்டிய இளைஞர் உயிரிழப்பு: அனைத்து சந்தேகநபர்களையும் கைது செய்யுமாறு உத்தரவு

எம்பிலிப்பிட்டிய இளைஞர் உயிரிழப்பு: அனைத்து சந்தேகநபர்களையும் கைது செய்யுமாறு உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

27 Jan, 2016 | 7:29 pm

எம்பிலிப்பிட்டிய சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களையும் கைது செய்யுமாறு எம்பிலிப்பிட்டிய மேலதிக நீதவான் சமிந்த பெர்னாண்டோ இன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில் வைபவமொன்றின் போது ஏற்பட்டதாகக் கூறப்படும் மோதலின் பின்னர் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான நீதவான் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது.

உயிரிழந்த இளைஞரின் மனைவி ஒன்றரை மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் இன்று சாட்சியமளித்தார்.

இந்தக் கொலைக்குப் பொறுப்புக்கூற வேண்டிய ASP மற்றும் SQI உள்ளிட்ட அனைத்து சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான உத்தரவை நீதவான் இன்று பிறப்பித்ததாக பாதிக்கப்பட்ட தரப்பினரின் சட்டத்தரணி
உதுல் பிரேமரத்ன தெரிவித்தார்.

அடுத்த மாதம் 3 ஆம் திகதி மீண்டும் சாட்சி விசாரணை இடம்பெறவுள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்