எம்பிலிப்பிட்டியவில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மீண்டும் சாட்சி விசாரணைகள் ஆரம்பம்

எம்பிலிப்பிட்டியவில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மீண்டும் சாட்சி விசாரணைகள் ஆரம்பம்

எம்பிலிப்பிட்டியவில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மீண்டும் சாட்சி விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2016 | 7:20 am

எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்ற மோதலில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பிலான சாட்சி விசாரணைகள் இன்றும் எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

இதன் போது மூன்று பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசி ஒருவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

அத்துடன் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்த இசைக்குழு உறுப்பினர் ஒருவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் இன்றைய தினம் பிற்பகல் 2 மணியளவில் எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் சாட்சி விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை இளைஞன் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட குழுவினர் இன்றைய தினம் எம்பிலிப்பிட்டிய நகருக்கு செல்லவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நே்றையை தினம் நியமிக்கப்பட்ட 3 உறுப்பினர்களை கொண்ட குழுவினரே இன்று எம்பிலிப்பிட்டியவிற்கு செல்லவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

எம்பிலிபிட்டிய நகரிற்கு சென்று சம்பவத்தில் உயிரிழந்த நபரின் மனைவி மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி ஆகியோரின் வாக்குமூலங்கள் பதிவு செய்து அறிக்கைகள் சமர்பிக்கப்படவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் கூறியுள்ளார்.

குறித்த சம்பவத்தின் போது பொலிஸ் அதிகாரி சட்டத்திற்கு முரணான வகையில் செயற்பட்டிருப்பின் உரிய நடவடிக்கைள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்