இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக சவுதி இளவரசர் தெரிவிப்பு

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக சவுதி இளவரசர் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

27 Jan, 2016 | 9:50 pm

”உதயமாகும் கிழக்கு – புதிய வாய்ப்புகள்” எனும் தொனிப்பொருளில் ”கிழக்கின் முதலீட்டு அரங்கம் 2016” நாளைய தினம் கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

கிழக்கின் முதலீட்டு அரங்கம் 2016 இல் கலந்து கொள்வதற்காக சவுதி அரேபியாவின் இளவரசர் அப்துல் அஸீஸ் அல் சவுத் இன்று நாட்டிற்கு வருகை தந்தார்.

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள சவுதி தீர்மானித்துள்ளதாகவும் இந்நாட்டின் அபிவிருத்தியில் பங்குகொள்வதன் மூலம் தம் நாட்டினை வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் சவுதி இளவரசர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்