இங்கிரியவில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு ஒருவர் கொலை

இங்கிரியவில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு ஒருவர் கொலை

இங்கிரியவில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு ஒருவர் கொலை

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2016 | 11:14 am

இங்கிரிய ஹந்தபான்கொட பகுதியில் நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் நேற்று (26) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் கூரிய ஆயுதத்தால் குத்தியதுடன் பொல்லால் தாக்கியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பாதுக்க பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் மேலும் இருவரும் பெண்ணொருவரும் காயமடைந்துள்ள நிலையில் பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன். அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை இங்கிரிய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்