அவன்ற் கார்ட் நிறுவனமே 700 மில்லியன் ரூபாவை எமக்கு வழங்க வேண்டியுள்ளது – பாதுகாப்பு செயலாளர்

அவன்ற் கார்ட் நிறுவனமே 700 மில்லியன் ரூபாவை எமக்கு வழங்க வேண்டியுள்ளது – பாதுகாப்பு செயலாளர்

அவன்ற் கார்ட் நிறுவனமே 700 மில்லியன் ரூபாவை எமக்கு வழங்க வேண்டியுள்ளது – பாதுகாப்பு செயலாளர்

எழுத்தாளர் Bella Dalima

27 Jan, 2016 | 10:10 pm

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியாவின் யுத்த கப்பலான விக்ரமாதித்யா கப்பல் தொடர்பிலும் எதிர்காலத்தில் வருகை தரவுள்ள கப்பல்கள் தொடர்பிலும் தெளிவூட்டுவதற்கு அரச பாதுகாப்பு அமைச்சு நேற்று (26) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இதில் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டிஆராய்ச்சி கலந்துகொண்டிருந்ததுடன், அவன்ற் கார்ட் தொடர்பில் ஊடகவியலாளர்கள் இங்கு கேள்வி எழுப்பினர்.

கேள்வி: அவன்ற் கார்ட் சம்பவம் தொடர்பில் சோமாலிய கொள்ளையர்களைக் கையாளும் மார்ஷல்கள் இராஜதந்திர ரீதியில் இலங்கைக்கு வந்து, அவன்ற் கார்ட் போன்ற கப்பல்களின் பாதுகாப்பிற்காக இங்கு எஸ்.டி.எஃப் யுத்த பயிற்சி முகாம்களில் பயிற்சிகளை வழங்கியுள்ளார்கள். இப்பொழுது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இருக்கின்ற நிலையில், இந்த பயிற்சிகளை வழங்குவது சட்ட ரீதியானதாகுமா?

பதில்: அவன்ற் கார்ட் நிறுவனம் தொடர்பில் மாத்திரம் சுட்டிக்காட்டுவதில் அர்த்தமில்லை. அவன்ற் கார்ட் என்பது சேவை வழங்கும் நிறுவனமொன்றாகும். இதனைப் போன்ற 60, 70 நிறுவனங்கள் இலங்கையிலுள்ளன. கப்பல் நிறுவனங்களுடன் சேவையாற்றும் நிறுவனங்களும் உள்ளன. அவர்களும் பயிற்சி பெறுகின்றனர். இந்த நிறுவனம் தொடர்பில் மாத்திரம் பேசத் தேவையில்லை.

கேள்வி: அவன்ற் கார்ட் விவகாரம் பிரச்சினையொன்று அல்ல என நீங்கள் கூறினீர்கள். எனினும், கடற்படையினர் அவன்ற் கார்ட் நிறுவனத்திற்கு மில்லியன் கணக்கான நிதியை இழப்பீடாக செலுத்த வேண்டும் என அண்மையில் பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியிருந்தது. இது உண்மையா?

பதில் : இல்லை. எவருக்கும் நாம் இழப்பீடு வழங்கப்போவதில்லை. அவன்ற் கார்ட் நிறுவனமே 700 மில்லியன் ரூபாவை எமக்கு வழங்க வேண்டியுள்ளது என நான் எண்ணுகின்றேன். முன்னர் கடற்படையினால் அவர்களுக்கு நாம் வழங்கிய சேவைக்காக அவர்கள் இந்த நிதியை வழங்க வேண்டும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்