அலன் போர்டர் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்  டேவிட் வார்னர்

அலன் போர்டர் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்  டேவிட் வார்னர்

அலன் போர்டர் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்  டேவிட் வார்னர்

எழுத்தாளர் Bella Dalima

27 Jan, 2016 | 9:09 pm

அவுஸ்திரேலியாவின் உயரிய கௌரவமான அலன் போர்டர் பதக்கம் (Allan Border Medal) இந்த வருடம் டேவிட் வார்னருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டீவன் ஸ்மித், மிச்செல் ஸ்டார்க் ஆகியோரை பின்தள்ளியே டேவிட் வார்னர், அலன் போர்டர் பதக்கத்திற்கு பாத்திரமாகியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் உயரிய கௌரவமான அலன் போர்டர் விருது வழங்கல் விழா மெல்பேர்னில் நேற்றிரவு நடைபெற்றது.

இந்த வருடம் அலன் போர்டர் விருதுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவரான ஸ்டீவன் ஸ்மித், உப தலைவரான டேவிட் வார்னர் மற்றும் மிச்செல் ஸ்டார்க் ஆகியோர் பிரேரிக்கப்பட்டிருந்தனர்.

வாக்குகளின் அடிப்படையில் 21 வாக்குகள் வித்தியாசத்தில் டேவிட் வார்னர், அலன் போர்டர் பதக்கத்தைத் தட்டிக்கொண்டார்.

அவருக்கு ஆதரவாக 240 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் ஸ்டீவன் ஸ்மித்துக்கு 219 வாக்குகள் கிடைத்திருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்