ஹிருணிக்காவின் டிபெண்டர் வாகனம் விடுவிக்கப்பட்டது

ஹிருணிக்காவின் டிபெண்டர் வாகனம் விடுவிக்கப்பட்டது

ஹிருணிக்காவின் டிபெண்டர் வாகனம் விடுவிக்கப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

26 Jan, 2016 | 5:44 pm

தெமட்டகொட பகுதியில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைப்பற்றப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவின் டிபெண்டர் வாகனம் விடுவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனம் மீதான 45 இலட்சம் ரூபா முறிகளுடன் கொழும்பு நீதவான் நீதிமன்றம் அதனை விடுவித்துள்ளது.

சந்தேகநபர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகளின் கோரிக்கைக்கு அமைய நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் இன்று அறிவித்தனர்.

அதற்கமைய, ஹிருணிக்காவின் டிபெண்டர் வண்டியை விடுவிப்பதில் ஆட்சேபனை இல்லை என குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

இதனையடுத்தே வாகனம் விடுவிக்கப்பட்டது.

இன்று பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட 9 சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அடுத்து வழக்கு விசாரணை ஏப்ரல் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்