ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு கூடியது: மஹிந்த கலந்துகொள்ளவில்லை

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு கூடியது: மஹிந்த கலந்துகொள்ளவில்லை

எழுத்தாளர் Bella Dalima

26 Jan, 2016 | 9:22 pm

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக்கூட்டம் இன்று முற்பகல் நடைபெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு கூடியது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகர்களான முன்னாள் ஜனாபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் பிரதமர் டி.எம் ஜயரத்ன, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ ஆகியோரும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

எனினும், கட்சியின் ஆலோசகர்களில் ஒருவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நிறைவேற்றுக் குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கவில்லை.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல், ஜெனீவா மனித உரிமை பேரவையின் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்