யாழிலுள்ள இந்திய துணைத்தூதரகத்தில் 67 ஆவது குடியரசு தின நிகழ்வுகள்

யாழிலுள்ள இந்திய துணைத்தூதரகத்தில் 67 ஆவது குடியரசு தின நிகழ்வுகள்

யாழிலுள்ள இந்திய துணைத்தூதரகத்தில் 67 ஆவது குடியரசு தின நிகழ்வுகள்

எழுத்தாளர் Bella Dalima

26 Jan, 2016 | 10:26 pm

இந்தியாவின் 67 ஆவது குடியரசு தின நிகழ்வுகள் இன்று யாழில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இடம்பெற்றது.

யாழில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தில் இன்று காலை 9 மணியளவில், இந்திய துணைத் தூதுவர் நட்ராஜன் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன் போது, இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டதுடன் இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின உரையும் அங்கு வாசிக்கப்பட்டது.

கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் அரச அதிகாரிகள், இந்திய பிரிதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்