மட்டக்களப்பில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2016 | 12:57 pm

மட்டக்களப்பு ஆரையம்பதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைக் கொலையின் சந்தேகநபர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட இரண்டு சந்தேகநபர்களின் விளக்கமறியலே எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (26) ஆஜர்படுத்தியதை அடுத்து
நீதவான் மாணிக்கவாசகர் கணேசராசாவினால் சந்தேகநபர்களுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் திகதி ஆரையம்பதி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்