நிஜ மனிதர்களைப் போல் பொம்மைகளை உருவாக்கும் ரஷ்யக் கலைஞர் (Photos)

நிஜ மனிதர்களைப் போல் பொம்மைகளை உருவாக்கும் ரஷ்யக் கலைஞர் (Photos)

நிஜ மனிதர்களைப் போல் பொம்மைகளை உருவாக்கும் ரஷ்யக் கலைஞர் (Photos)

எழுத்தாளர் Bella Dalima

26 Jan, 2016 | 3:54 pm

மாஸ்கோவில் வசிக்கும் மைக்கேல் ஸஜ்கோவ் நிஜ மனிதர்களைப் போல பொம்மைகளைச் செய்வதில் சிறந்த கலைஞர்.

இவர் பொலிமர் களிமண்ணைக் கொண்டு பொம்மைகளின் உடலை உருவாக்குகிறார்.

கண்களுக்கு ஜெர்மன் கண்ணாடிகளைப் பயன்படுத்துகிறார்.

தலை முடியை பிரான்சில் இருந்து வாங்குகிறார்.

இப்படி எல்லாம் சேரும்போது நிஜ மனிதர்களைப் போலவே பொம்மைகள் தோற்றம் அளிக்கின்றன.

பொம்மலாட்டக் கலைஞராக இருந்த மைக்கேல், 2010 ஆம் ஆண்டுதான் முதல் பொம்மையை உருவாக்கினார்.

உலகம் முழுவதும் இவருடைய பொம்மைகளுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். தான் எப்படி பொம்மையை உருவாக்குகிறார் என்பதையும் வீடியோவாக வெளியிட்டு வருகிறார் மைக்கேல்.

[quote]இத்தாலியைச் சேர்ந்த லாரா ஸ்காடோலினி, பிரான்ஸைச் சேர்ந்த ஆன் மிட்ரானி ஆகியோரைப் பார்த்துதான் பொம்மைகள் உருவாக்கும் எண்ணம் வந்தது. என்னுடைய பொம்மைகள் பழமையை எடுத்துச் சொல்லக்கூடியவை. ஒவ்வொரு பொம்மையையும் ஏதோ ஒரு சோகத்தை வெளிப்படுத்துவதாகவே உருவாக்குகிறேன். மற்ற பொம்மைகளைப் போல எல்லோருக்கும் என் பொம்மைகள் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. பொம்மை என்றாலே மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் எல்லோரின் விருப்பமாக இருக்கும். பொம்மைகளைச் சேகரிப்பவர்களும் என் திறமை மீது ஆர்வம் உள்ளவர்களும்தான் என் வாடிக்கையாளர்கள்[/quote]

என்றார் மைக்கேல்.

 

3086E81600000578-3410510-Michael_s_dolls_are_startlingly_lifelike-m-9_1453639305822

3086E82000000578-3410510-image-a-30_1453631428235

3086E81A00000578-3410510-image-m-11_1453639327024

3087020D00000578-3410510-One_of_Michael_s_dolls_Alice_wearing_a_lace_bonnet_and_collar_ba-m-12_1453639494321

3086FC6B00000578-3410510-image-a-26_1453631400809


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்