ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் அமைச்சர் பைசர் முஸ்தபா தெளிவூட்டல்

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் அமைச்சர் பைசர் முஸ்தபா தெளிவூட்டல்

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் அமைச்சர் பைசர் முஸ்தபா தெளிவூட்டல்

எழுத்தாளர் Bella Dalima

26 Jan, 2016 | 10:32 pm

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சிலர் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முதலாவது பதவிக்காலம் தொடர்பில் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெளிவூட்டினார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி, பைஸர் முஸ்தபா தெரிவித்ததாவது,

[quote]குடியரசில் ஜனாதிபதி ஒருவர் மக்களால் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதோடு 5 வருடங்கள் அவர் பதவி வகிக்க வேண்டும்.19 ஆவது திருத்தம் நிறைவேறும் பட்சத்தில் ஜனாதிபதி பதவியேற்றிருந்தார். அவர் பதவியேற்கும் போது, அரசியல் அமைப்பின் பிரகாரம் 6 ஆண்டுகளுக்கே நிறைவேற்று ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக சட்ட ஆலோசனை அவருக்கு அவசியம். அவரின் சுய விருப்பு வேறு. அவரின் சுயவிருப்பு குறித்து கலந்துரையாடப்படுவது இங்கு பிரச்சினையாக அமையவில்லை. அவ்வாறென்றால், அதிமேதகு ஜனாதிபதி அடுத்த தேர்தல் வரை ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த அவருக்கு விருப்பம் உண்டு. அதனால் இன்று நான் நம்பிக்கைக்குரிய அறிவிப்பொன்றை விடுப்பதற்கு விரும்புகின்றேன். நான் இன்று பேசுவது சட்ட நிலைமை குறித்து மட்டுமே. [/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்