சம்பூரில் கல்லில் கட்டிய நிலையில் பாழடைந்த கிணற்றிலிருந்து 6 வயது சிறுவனின் சடலம் கண்டெடுப்பு

சம்பூரில் கல்லில் கட்டிய நிலையில் பாழடைந்த கிணற்றிலிருந்து 6 வயது சிறுவனின் சடலம் கண்டெடுப்பு

சம்பூரில் கல்லில் கட்டிய நிலையில் பாழடைந்த கிணற்றிலிருந்து 6 வயது சிறுவனின் சடலம் கண்டெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2016 | 12:38 pm

திருகோணமலை சம்பூர் பகுதியில் 6 வயது சிறுவன் கல்லில் கட்டிய நிலையில் பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று (25) நள்ளிரவில் சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சம்பூர் 7 ஆம் வட்டார பகுதியை சேர்ந்த 6 வயது சிறுவனே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று (25) மாலை சிறுவன் காணாமற்போயிருந்ததோடு, பொலிஸாரின் உதவியுடன் குறித்த சிறுவன் தேடப்பட்டுள்ளான்.

இதனை அடுத்து சம்பூர் கடற்படை முகாமிற்கு அருகிலுள்ள தனியார் காணியொன்றில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளான்.

குறித்த சிறுவனின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் சம்பூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்