சட்டவிரோத பிரமிட் நிதி நிறுவன முறை தொடர்பில்  விசாரணைகளை ஆரம்பிக்குமாறு நீதி அமைச்சர் கோரிக்கை

சட்டவிரோத பிரமிட் நிதி நிறுவன முறை தொடர்பில்  விசாரணைகளை ஆரம்பிக்குமாறு நீதி அமைச்சர் கோரிக்கை

சட்டவிரோத பிரமிட் நிதி நிறுவன முறை தொடர்பில்  விசாரணைகளை ஆரம்பிக்குமாறு நீதி அமைச்சர் கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2016 | 7:10 am

சட்டவிரோத பிரமிட் நிதி நிறுவன முறை தொடர்பில் விரைவில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜேயதாச ராஜபக்ஸ பொலிஸ் மாஅதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறான பாரிய நிதி திட்டம் குறித்து பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் நிதிக் கொள்கைக்கு முரணாக இவ்வாறான நிறுவனங்கள் மக்களை இலக்கு வைத்து செயற்படுவதாகவும் நீதி அமைச்சர் கூறியுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக சட்டத்தை உரிய வகையில் முன்னெடுக்குமாறு பொலிஸ் மாஅதிபருக்கு அறிவித்துள்ளார்.

இதனிடையே இவ்வாறான சம்பவங்கள் குறித்து கிடைக்கும் முறைப்பாடுகள் விசாரணைக்குட்படுத்தி, நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறான முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு இலங்கை மத்திய வங்கியினூடாக விசாரணை பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த விசாரணை குழுவிற்கு சில பொலிஸாரும் நியமிக்கப்பட்டுள்ளதாவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்