எம்பிலிப்பிட்டிய இளைஞன் உயிரிழப்பு: விசாரணைக்குழு குறித்த பகுதிக்கு இன்று விஜயம்

எம்பிலிப்பிட்டிய இளைஞன் உயிரிழப்பு: விசாரணைக்குழு குறித்த பகுதிக்கு இன்று விஜயம்

எம்பிலிப்பிட்டிய இளைஞன் உயிரிழப்பு: விசாரணைக்குழு குறித்த பகுதிக்கு இன்று விஜயம்

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2016 | 8:44 am

எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்ற மோதலின் போது இளைஞன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு நியமிக்கப்பட்ட குழு இன்றைய தினம் குறித்த பிரதேசத்திற்கு விஜயம் செய்து விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மூவரிடங்கிய குழுவினரே இந்த விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தின் போது பொலிஸார் சட்டத்திற்கு முரணான வகையில் செயற்பட்டுள்ளனரா, சட்டம் உரிய வகையில் செயற்படுத்தப்பட்டதா என்பது தொடர்பில் இதன் போது ஆராயப்படவுள்ளது .

எம்பிலிப்பிட்டியவில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அங்கிருந்த ஒரு குழுவினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து குறித்த கட்டடத்தில் இருந்து கீழே வீழ்ந்து இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்