இரத்தினபுரியில் பஸ் மிதிபலகையில் இருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

இரத்தினபுரியில் பஸ் மிதிபலகையில் இருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

இரத்தினபுரியில் பஸ் மிதிபலகையில் இருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2016 | 10:51 am

இரத்தினபுரி – எம்பிலிப்பிட்டி பிரதான வீதியில் பயணித்த தனியார் பஸ் ஒன்றின் மிதிபலகையில் சென்றவர் கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இந்த அனர்த்தம் நேற்றிரவு 7.40 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
பஸ்ஸிலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்ட குறித்த நபர் கொடகவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கொடக்கவெல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று (26) முன்னெடுக்கப்படவுள்ளன.

குறித்த அனர்த்தத்துடன் தொடர்புடைய தனியார் பஸ் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இறக்குவானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்