இந்தியாவிலிருந்து 20 அகதிகள் இன்று தாயகம் திரும்பியுள்ளனர்

இந்தியாவிலிருந்து 20 அகதிகள் இன்று தாயகம் திரும்பியுள்ளனர்

இந்தியாவிலிருந்து 20 அகதிகள் இன்று தாயகம் திரும்பியுள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2016 | 12:10 pm

இந்தியாவிலுள்ள அகதி முகாம்களில் இருந்து 20 இலங்கையர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

திருச்சியிலிருந்து இன்று (26) காலை 10.30 இற்கு யூ.எல் 132 இலக்க விமானத்தில் அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்ற, இந்துமத அலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

12 ஆண்களும், 8 பெண்களுமே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் இவர்கள் மீள்குடியமர்த்தப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் வேலாயுதம் சிவஞானஜோதி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை வந்தடைந்தவர்களுக்கான இலவச விமானச் சீட்டு வழங்கப்பட்டுள்ளதுடன், சமூக ஒருங்கினைப்பிற்கான நன்கொடையாக 75 அமெரிக்க டொலர்களும், போக்குவரத்து செலவினங்களுக்கு 19 அமெரிக்க டொலர்களும், உணவு அல்லாத பண உதவியாக 75 அமெரிக்க டொலர்களும் வழங்கப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

மேலும் தாயகம் திரும்பியுள்ளவர்களுக்கு 6 மாதத்திற்கான உலர் உணவுகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரை 470 பேர் தமிழகத்திலிருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு மீள்கிடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவிலுள்ள 109 அகதி முகாம்களில் 64,000 இங்கையர்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளதாகவும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்