அமெரிக்கா, தாய்வான், ஜம்முவில் வரலாறு காணாத பனிப்பொழிவு: உயிரிழப்புகள் அதிகரிப்பு

அமெரிக்கா, தாய்வான், ஜம்முவில் வரலாறு காணாத பனிப்பொழிவு: உயிரிழப்புகள் அதிகரிப்பு

அமெரிக்கா, தாய்வான், ஜம்முவில் வரலாறு காணாத பனிப்பொழிவு: உயிரிழப்புகள் அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

26 Jan, 2016 | 3:12 pm

தாய்வானில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக 85 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தாய்வானில் தாய்பே உட்பட முக்கிய நகரங்களில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிது.

ஆகக்குறைந்த வெப்பநிலையான 4 டிகிரி செல்சியஸ் நிலவுகிறது. இதனால் அங்கு 85 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல், அமெரிக்காவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீசிய கடுமையான பனிப்புயல் காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் கிழக்கு கடலோரப்பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பனிப்புயல் தாக்கி வந்தது. வடக்கு மற்றும் தெற்கு கரோலினா மாகாணங்கள் முதல் நியூயார்க் வரை பனிப்புயலில் சிக்கியது.

இதன் காரணமாக பல நகரங்களில் 3 அடிகளுக்கும் மேலாக பனிப்பொழிவு இருந்தது.

பல மாகாணங்களில் அவசரகாலநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 9000 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, ஜம்முவிலும் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது.

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தபட்சமாக 0.05டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அங்கு நிலவுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்