வித்தியாவின் கொலை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

வித்தியாவின் கொலை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

வித்தியாவின் கொலை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

எழுத்தாளர் Staff Writer

25 Jan, 2016 | 1:54 pm

புங்குடு தீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் கொலை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று முன்னெடுக்கப்பட்ட போது எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தி நீதவான் மொஹமட் ரியாஸ் உத்தரவிட்டுள்ளார்.

இன்றைய நீதிமன்ற விசாரணையின் போது கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களும் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

வழக்குடன் தொடர்புடைய மரபணு பரிசோதனை அறிக்கை குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்றும் நீதிமன்றத்திற்கு சமர்பிக்கப்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்