புதிய கட்சியை உருவாக்குவதற்கான ஆயத்தம் தொடர்பில் சந்திரிக்கா பண்டாரநாயக்க கருத்து

புதிய கட்சியை உருவாக்குவதற்கான ஆயத்தம் தொடர்பில் சந்திரிக்கா பண்டாரநாயக்க கருத்து

புதிய கட்சியை உருவாக்குவதற்கான ஆயத்தம் தொடர்பில் சந்திரிக்கா பண்டாரநாயக்க கருத்து

எழுத்தாளர் Staff Writer

25 Jan, 2016 | 8:21 pm

புதிய அரசியல் கட்சி உருவாக்கம் தொடர்பாக இன்றும் பல்வேறு தரப்பினரும் கருத்து வெளியிட்டனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வடமேல் மாகாண சபை உறுப்பினர் டி.பி.ஹேரத்தின் வாறியபொலவில் உள்ள வீட்டில் கடந்த 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின்போது புதிய கட்சியை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை தொடர்பாக கடந்த திங்கட்கிழமை நியூஸ்பெஸ்ட் செய்தி வெளியிட்டது.

வாறியபொலவில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

கம்பஹா மாவட்டத்திலுள்ள 19 உள்ளூராட்சி மன்றங்களில் நீர்கொழும்பு மாநகர சபை தவிர்ந்த ஏனைய 18 உள்ளுராட்சி மன்றங்களினதும் உறுப்பிர்கள் இன்று (25) கலந்துகொண்ட ஊடக சந்திப்பின்போதும் புதிய அரசியல் கட்சி தொடர்பில் கருத்து வெளியிடப்பட்டது.

இதேவேளை, களுத்துறையில் இன்று நடைபெற்ற மற்றுமொரு ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் உள்ளுராட்சி மன்றங்கள் சிலவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாக கடந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றிருந்த இடதுசாரி கட்சிகள் சிலவும் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தின.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடமும் ஊடகவியலாளர்கள் இன்று புதிய அரசியல் கட்சி தொடர்பில் வினவினர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்