பிரபல வர்த்தகர் லலித் கொத்தலாவல ஊழல் மோசடி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

பிரபல வர்த்தகர் லலித் கொத்தலாவல ஊழல் மோசடி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

பிரபல வர்த்தகர் லலித் கொத்தலாவல ஊழல் மோசடி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

எழுத்தாளர் Staff Writer

25 Jan, 2016 | 1:45 pm

பிரபல வர்த்தகர் லலித் கொத்தலாவல பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளார்.

பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வாக்குமூலம் பதிவு செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஸவிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் , இன்று ஆஜராக முடியாது என அவர் அறிவித்துள்ளார்.

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடி குறித்து வாக்கு மூலம் பதிவு செய்வதற்கே முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் லெஷில் டி. சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிரபல வர்த்தகர் லலித் கொத்தலாவல பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளார்.

கொள்ளுபிட்டி காலி வீதியில் நிர்மானிக்கப்படும் கட்டமொன்றின் நிர்மானப்பணியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடி குறித்து வாக்கு மூலம் அளிப்பதற்கே அவர் வருகை தந்துள்ளதாக லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்