பிரபல நடிகை கல்பனா ரஞ்சனி காலமானார்

பிரபல நடிகை கல்பனா ரஞ்சனி காலமானார்

பிரபல நடிகை கல்பனா ரஞ்சனி காலமானார்

எழுத்தாளர் Staff Writer

25 Jan, 2016 | 12:13 pm

பிரபல நடிகையான கல்பனா ரஞ்சனி இன்று காலை ஹைதராபாத்தில் உயிரிழந்துள்ளார்.

நேற்று ஒரு சினிமா பட தயாரிப்பிற்காக நடிகை கல்பனா ஐதராபாத் சென்றார். அங்குள்ள ஒரு ஓட்டலில் அவரும், படக்குழுவினரும் தங்கியிருந்தனர். இன்று அதிகாலை நடிகை கல்பனா அவரது அறையில் மயங்கி கிடந்தார். படக்குழுவினர் அவரை மீட்டு அங்குள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார். அவர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இறந்து போன கல்பனாவின் சகோதரிகள் ஊர்வசி, கலாரஞ்சனி ஆகிய 2 பேருமே திரையுலகில் கலக்கியவர்கள்.

கல்பனாவின் உடல் இன்று விமானம் மூலம் ஐதராபாத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு அவருக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கல்பனாவின் மரணம் பற்றி தெரியவந்ததும் மலையாள மற்றும் தமிழ் திரைப்பட கலைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது இறுதி சடங்கில் பங்கேற்கவும் அவர்கள் திருவனந்தபுரம் செல்கிறார்கள்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்