ஓமானிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட கிளிநொச்சி இளைஞன் கைது

ஓமானிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட கிளிநொச்சி இளைஞன் கைது

ஓமானிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட கிளிநொச்சி இளைஞன் கைது

எழுத்தாளர் Staff Writer

25 Jan, 2016 | 12:14 pm

ஓமானிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட கிளிநொச்சி இளைஞனொருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் குற்ற புலனாய்வு பிரிவினரால் சந்தேகநபர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

போலி கடவுச்சீட்டின் மூலம் இத்தாலிக்கு செல்ல குறித்த சந்தேகநபர் முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க பிராந்திய குற்றப்புலனாய்வு பிரிவினர் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்