அனைத்து மக்களினதும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி

அனைத்து மக்களினதும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி

அனைத்து மக்களினதும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

25 Jan, 2016 | 6:57 am

அனைத்து மக்களினதும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் நேற்று(24) புதிய ஆடைத் தொழிற்சாலையொன்றை திறந்து வைத்து உரையாற்றமு போதே ஜனாதிபதி இதனை கூறினார்.

ஆடைத்தொழிற்சாலையை திறந்துவைத்த பின்னர், அங்கிருந்த இளைஞர் யுவதிகளின் பிரச்சினைகளையும் ஜனாதிபதி கேட்டறிந்தார்.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி தமக்கு 21 மில்லியன் மக்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டியுள்ளதாகவும், தொழிற்சாலையை சுற்றி பார்த்த சந்தர்ப்பத்தில் இளைஞர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள், யுத்தத்தினால் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தீர்வினைப் பெற்றுத் தருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் இலங்கையின் ஏனைய பகுதிகளை விடவும் வட மாகாணத்தில் போதைப்பொருள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது. போதைப்பொருள் என்பது ஆயுதங்களை விடவும் பயங்கரமானது. அதனால் போதைப்பொருள் பாவனையை கைவிடுமாறு அங்கிருந்தவர்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்.

ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர் சிவராஜா ஜெனீவன் தனது பெற்றொருடன் ஜனாதிபதியை சந்தித்து இதன்போது நன்றி கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்