விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் அந்நாட்டு அதிகாரிகளிடம் இன்று ஒப்படைப்பு

விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் அந்நாட்டு அதிகாரிகளிடம் இன்று ஒப்படைப்பு

விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் அந்நாட்டு அதிகாரிகளிடம் இன்று ஒப்படைப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Jan, 2016 | 10:36 am

இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்டுள்ள 102 மீனவர்கள் இந்திய கரையோர பாதுகாப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் அக்றம் அளவி குறிப்பிட்டார்.

காங்கேசன்துறைக்கு வடக்கு கடற்பிராந்தியத்திலுள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் இன்று (21) முற்பகல் 11 மணிக்கு இந்திய மீனவர்கள் அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பிராந்தியத்திற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்