மேல் மாகாணத்தில் டெங்கு ஒழிப்புத் திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை

மேல் மாகாணத்தில் டெங்கு ஒழிப்புத் திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை

மேல் மாகாணத்தில் டெங்கு ஒழிப்புத் திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

21 Jan, 2016 | 8:41 am

மேல் மாகாணத்தில் டெங்கு அவதான வலையங்களில் நுளம்பு ஒழிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடளாவிய ரீதியில் சுமார் 1500 டெங்கு நோயாளர்கள் இதுவரை பதிவாகியுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாணத்தில் நுகேகொட. கொலன்னாவ, வத்தளை, ரத்மலான, தெஹிவலை, மஹரகம, ஜா – எல, நீர்கொழும்பு, மொரட்டுவ மற்றும் பானந்துறை ஆகிய பகுதிகளில் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளில் எதிர்வரும் 28, 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்