மாநகர அபிவிருத்தி உத்தேச செயற்றிட்டம் குறித்து பாட்டலி விளக்கம் 

மாநகர அபிவிருத்தி உத்தேச செயற்றிட்டம் குறித்து பாட்டலி விளக்கம் 

எழுத்தாளர் Bella Dalima

21 Jan, 2016 | 6:28 pm

மேல் மாகாணத்தை மாநகரமாக அபிவிருத்தி செய்யும் உத்தேச செயற்றிட்டம் தொடர்பில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.

நான்கு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மூன்று கட்டங்களாக இந்த செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர்  இதன்போது குறிப்பிட்டார்.

இந்த அபிவிருத்தித் திட்டத்திற்காக 40 பில்லியன் டொலர்கள் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மாநகர அபிவிருத்தி செயற்றிட்டத்தை பூர்த்தி செய்வதற்கு 15 வருடங்கள் செல்லும் எனவும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்