மணல் ஏற்றிச் செல்லும் லொறிகளை பதிவு செய்வதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்

மணல் ஏற்றிச் செல்லும் லொறிகளை பதிவு செய்வதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்

மணல் ஏற்றிச் செல்லும் லொறிகளை பதிவு செய்வதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

21 Jan, 2016 | 9:07 am

மணல் ஏற்றிச் செல்லும் லொறிகளை பதிவு செய்வதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

50 வீதமான லொறிகள் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிச் செல்வதாக பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பர்னாட் பிரேம் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த லொறிகளை பதிவு செய்து ஜீ.பி.எஸ். தொழில்நுட்பக் கருவி பொருத்தப்படவுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் ஊடாக சட்டவிரோதமாக மணல் ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் லொறிகள் தொடர்பில் கண்காணிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளவிய ரீதியில் 4000 தொடக்கம் 5000 வரையிலான லொறிகளில் மணல் ஏற்றுவதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் பணி்ப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்