புதிய தொலைக்காட்சி அலைவரிசை TV1 ஐ இலங்கை ரசிகர்கள் கண்டுகளிக்க முடியும்

புதிய தொலைக்காட்சி அலைவரிசை TV1 ஐ இலங்கை ரசிகர்கள் கண்டுகளிக்க முடியும்

எழுத்தாளர் Bella Dalima

21 Jan, 2016 | 5:57 pm

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா ஊடக வலையமைப்பின் புதிய தொலைக்காட்சி அலைவரிசையான TV1 இனை தற்போதிருந்து இலங்கை ரசிகர்கள் கண்டுகளிக்க முடியும்.

TV1 அலைவரிசை ஸ்டையின் கலையகத் தொகுதியில் இன்று சர்வமத வழிபாடுகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்று மாலை 5.04 க்கு அமைந்துள்ள சுபநேரத்தில் TV1 தனது ஒளிபரப்பை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது.

இந்த மகிழ்ச்சிகரமான தருணத்தில் வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

புதிய தொலைக்காட்சி யுகத்தின் ஆரம்பத்தை அடையாளப்படுத்தி TV1 அலைவரிசை இலங்கை தொலைக்காட்சி ரசிகர்களுக்கான புதிய, சுவையான, புதுமையான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்குத் தயாராகவுள்ளது.

UHF 51 மற்றும் 58 அலைவரிசைகளிலும், டயலொக் ரிவியின் 10 ஆம் அலைவரிசையிலும், PEO TVயின் 12 ஆம் அலைவரிசையிலும்TV1 இனை எம் நாட்டு ரசிகர்கள் பார்வையிட முடியும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்