பிரேசிலில் ஸிக்கா வைரஸால் 5 குழந்தைகள் பலி

பிரேசிலில் ஸிக்கா வைரஸால் 5 குழந்தைகள் பலி

பிரேசிலில் ஸிக்கா வைரஸால் 5 குழந்தைகள் பலி

எழுத்தாளர் Bella Dalima

21 Jan, 2016 | 3:34 pm

பிரேசிலில் ஸிக்கா வைரஸ் தாக்கத்தினால் 5 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

வடகிழக்கு பிரேசிலில் ஸிக்கா வைரஸ் நோய் தாக்கி 5 குழந்தைகள் பலியாகி உள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிரேசிலில் இதுவரை 3,893 பேருக்கு மர்ம நோய் தாக்கியுள்ளது. இதில், 224 பேருக்கு ஸிக்கா வைரஸ் நோய் தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த வைரஸ் கருவில் உள்ள குழந்தைகளின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்துதல், பெருமூளை வாதம், கண் பார்வை இழத்தல் மற்றும் கேட்கும் திறன் குறைதல் ஆகிய பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக பிரேசில் விஞ்ஞானிகள் சமீபத்தில் தெரிவித்துள்ளனர்.

மார்ச் 2014 ஆம் ஆண்டு லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் Aedes Aegypti கொசு மூலம் இந்த வைரஸ் நோய் பரவியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்