தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கலந்துரையாடல்: மண்டபத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கலந்துரையாடல்: மண்டபத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

21 Jan, 2016 | 9:20 pm

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது.

இந்த சந்திப்பு இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை தமது உறவுகளைத் தேடித்தருமாறு வலியுறுத்தி காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த சந்திப்பில் கலந்து கொள்வற்காகச் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன் கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் கலந்துரையாடல் ஆரம்பமானது.

இந்தக் கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும், கூட்டமைப்பின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, காணாமற்போன தமது உறவுகளை தேடித்தருமாறு வலியுறுத்தி காணாமல் போனவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

அதன் போது அங்கு பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் சந்தித்துக் கலந்துரையாடினார்.

மேலும் சில மாகாண சபை உறுப்பினர்களும் ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்