டீ.ஆர்.எஸ். மீள் பரிசீலனை முறைமையில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் எதிர்காலத்தில் கவனம் செலுத்தப்படும்

டீ.ஆர்.எஸ். மீள் பரிசீலனை முறைமையில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் எதிர்காலத்தில் கவனம் செலுத்தப்படும்

டீ.ஆர்.எஸ். மீள் பரிசீலனை முறைமையில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் எதிர்காலத்தில் கவனம் செலுத்தப்படும்

எழுத்தாளர் Staff Writer

21 Jan, 2016 | 9:43 am

டீ.ஆர்.எஸ். மீள் பரிசீலனை முறைமையில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் எதிர்வரும் காலங்களில் தீர்மானிக்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து கடந்த ஒருவருடமாக முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்புக்களை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை குறிப்பிட்டுள்ளது.

20ற்கு 20 உலகக் கிண்ண தொடருக்கான கிண்ணத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று சென்னையில் இடம் பெற்றது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் டேவிட் றிச்சட்சன் மற்றும் முன்னாள் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கார் ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது .

டீ.ஆர்.எஸ். மீள் பரிசீலனை முறைமை தொடர்பிலான ஆய்வின் முடிவு எதிர்வரும் மே மாதம் தமக்கும் கிடைக்கும் எனவும் அதன் பின்னர் இந்த முறைமையில் மாற்றம் கொண்டு வருவதில் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை தலைவர் டேவிட் றிச்சட்சன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றினால் இந்த ஆய்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

20ற்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் இந்தியாவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்