சீனாவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

சீனாவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

சீனாவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

எழுத்தாளர் Staff Writer

21 Jan, 2016 | 10:44 am

சீனாவின் மென்யுவானில் இன்று (21) அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

சீனாவின் மென்யுவானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நில நடுக்கத்தினால் 40 கட்டடங்கள் அழிவடைந்துள்ள போதிலும் உயிரிழப்புக்கள் பதிவாகவில்லை.

3.4 ரிக்டர் அளவில் முதலாவது நில நடுக்கம் பதிவானதாகவும், பின்னர் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாகவும் சீன நிலநடுக்க வலையமைப்பு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் காணாமற்போன மற்றும் காயமடைந்தோரை மீட்பதற்காக பொலிஸார் மற்றும் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

இதேவேளை, தடைப்பட்டிருந்த தொலைத்தொடர்பு சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கும் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறிய பலர் மீண்டும் இருப்பிடங்களுக்கு திரும்பியுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்