சிங்கங்களிடம் சிக்கிய மனநலம் பாதிக்கப்பட்டவர் மீட்கப்பட்டார் (Video)

சிங்கங்களிடம் சிக்கிய மனநலம் பாதிக்கப்பட்டவர் மீட்கப்பட்டார் (Video)

எழுத்தாளர் Bella Dalima

21 Jan, 2016 | 4:34 pm

தாய்வான் உயிரியல் பூங்காவில் சிங்கங்களிடம் சிக்கிய மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மரண வாசலிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

தாய்வானின் தைபேய் உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் அடைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் திடீரென குதித்துவிட்டார்.

அவரை வேட்டையாடுவதற்காக சிங்கங்கள் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்தன.

தன்னைச் சுற்றியுள்ள விபரீதத்தை உணராதவராக அந்நபர் நடந்துகொள்கிறார்.

மரணத்தின் வாசலில் நின்ற அவரை சிங்கங்களிடம் இருந்து மீட்பதற்காக சிங்கங்கள் மீது தண்ணீரைப் பாய்ச்சி அடித்தனர் பூங்கா ஊழியர்கள்.

இதனால் சிங்கங்கள் விலகிக்கொள்ள மனநிலை பாதிக்கப்பட்டவர் உயிரோடு மீட்கப்பட்டார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் பதிவேற்றப்பட்டுள்ள இந்த வீடியோக் காட்சி சமூக வலைத்தளங்களில் தற்போது பெரும் வைரலாகப் பரவி வருகிறது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்