சட்டவிரோத சிறுநீரக விற்பனை: வெளிநாட்டவர்களுக்கு மாற்று அறுவை சிகிச்சைகள் நிறுத்தம்

சட்டவிரோத சிறுநீரக விற்பனை: வெளிநாட்டவர்களுக்கு மாற்று அறுவை சிகிச்சைகள் நிறுத்தம்

சட்டவிரோத சிறுநீரக விற்பனை: வெளிநாட்டவர்களுக்கு மாற்று அறுவை சிகிச்சைகள் நிறுத்தம்

எழுத்தாளர் Bella Dalima

21 Jan, 2016 | 10:30 pm

தனியார் வைத்தியசாலைகளில் வெளிநாட்டவர்களுக்கு மேற்கொள்ளப்படுகின்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு இன்று தீர்மானித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் சிறுநீரகங்களை விற்பனை செய்யும் நடவடிக்கை தொடர்பில் இந்திய பொலிஸார் வெளியிட்ட தகவலை அடுத்தே அமைச்சு இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டது.

2012 ஆம் ஆண்டிலிருந்து இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சுரேஷ் பிரஜாபதீ என்பவரும் அவரது உதவியாளரும் இந்தியாவின் தெலுங்கானா மாநில பொலிஸாரால் கைது செய்யப்பட்டதை அடுத்து இது தொடர்பிலான தகவல்கள் வெளியாகின.

சிறுநீரகங்களை விற்க விரும்பும் இந்தியப் பிரஜைகள் கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டு நான்கு வைத்தியசாலைகளில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெலுங்கானா மாநில பொலிஸார் கூறினர்.

இலங்கையின் ஆறு வைத்திய அதிகாரிகளும் இந்த சட்டவிரோத நடவடிக்கையுடன் தொடர்புபட்டுள்ளமை விசாரணைகளில் நிரூபணமாகியுள்ளது.

இந்திய நாணயப் பெறுமதிக்கு அமைய, 28 இலட்சம் ரூபா தொடக்கம் 35 இலட்சம் ரூபா வரை ஒரு சிறுநீரகம் விற்கப்பட்டுள்ளதுடன் பிரதான சந்தேகநபர் ஒரு சிறுநீரக விற்பனைக்காக 5 இலட்சம் இந்திய ரூபாவைப் பெற்றுக்கொண்டமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் தெலுங்கானா பொலிஸ் அத்தியட்சகர் விக்ரம் ஜித் துக்கலிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, பிரதான சந்தேகநபர் ஏற்கனவே ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதன்போது இலங்கையிலுள்ள நான்கு வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய அதிகாரிகளின் பெயர்களையும் சந்தேகநபர் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து இந்திய மத்திய அரசாங்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் இரு நாடுகளும் இணைந்து நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் விக்ரம் ஜித் துக்கல் நியூஸ்பெஸ்டிற்குக் கூறினார்.

மேலதிகத் தகவல்களை காணொளியில் காண்க…

 

சட்டவிரோத சிறுநீரக விற்பனை: வெளிநாட்டவர்களுக்கு மாற்று அறுவை சிகிச்சைகள் நிறுத்தம்

Posted by Newsfirst.lk tamil on Thursday, January 21, 2016


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்