சட்டவிரோதமாக நியூசிலாந்து செல்ல முயன்ற இலங்கையர் அறுவர் இந்தியாவில் கைது

சட்டவிரோதமாக நியூசிலாந்து செல்ல முயன்ற இலங்கையர் அறுவர் இந்தியாவில் கைது

சட்டவிரோதமாக நியூசிலாந்து செல்ல முயன்ற இலங்கையர் அறுவர் இந்தியாவில் கைது

எழுத்தாளர் Bella Dalima

21 Jan, 2016 | 7:36 pm

சட்டவிரோதமாக நியூசிலாந்து செல்ல முயற்சித்த 6 இலங்கை அகதிகள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படகு மூலம் சட்டவிரோதமாகப் பயணிக்க முயற்சித்த போது Q பிரிவு பொலிஸாரால் அவர்கள் நேற்று (20) கைது செய்யப்பட்டதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கரூர் மாவட்டத்திலுள்ள ராயனூர் இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த இரண்டு ஆண்களும், கோட்டைப்பட்டு அகதி முகாமிலிருந்த இரண்டு ஆண்களும் இரும்பூதிப்பட்டி அகதி முகாமில் தங்கியிருந்த இரண்டு ஆண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத படகு சேவைக்கு தலா ஒரு இலட்சம் இந்திய ரூபா வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்