கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதாக பிரதமர் அறிவிப்பு

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதாக பிரதமர் அறிவிப்பு

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதாக பிரதமர் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Jan, 2016 | 11:13 am

துறைமுக நகர திட்டத்தை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதாக சுவிட்ஸர்லாந்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன் முதலீடுகளை மேற்கொள்ள சீன முதலீட்டாளர்களை இலங்கைக்கு வருமாறும் இதன்போது பிரதமர் அழைப்பு விடுத்தார்.

இதேவேளை, உலக பொருளாதார மாநாட்டில் பங்குபற்றுவதற்காக சுவிட்ஸர்லாந்தின் டாவோஸ் நகரை சென்றடைந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அங்கு அரச தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

சுவீடன் பிரதமர் ஸ்டெஃபன் லோஃப்வன் மற்றும் துருக்கி பிரதமர் அஹமட் தாவோதோக்லு ஆகியோரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடியதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்ஸர்லாந்தின் டாவோஸ் நகரில் நேற்று முற்பகல் ஆரம்பமான உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உலகின் பாரியளவிலான வர்த்தக நிறுவனங்கள் பலவற்றின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

இலங்கையில் விரைவில் பாரியளவிலான முதலீடுகளில் ஈடுபடுவதற்கு அந்த வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் பிரதமரிடம் விருப்பம் தெரிவித்துள்ளதாக, பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலக பொருளாதார மாநாட்டிற்கு அமைவாக, உலகின் பிரபல வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

உலகப் பிரசித்திபெற்ற மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் தலைவர் ஜீன் பிலிப் கோர்டொய்ஸ்ஸை டாவோஸ் நகரில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (21) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்