எம்.சுபைதீனுக்கு எதிராக தடை உத்தரவு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரிக்கப்பட்டது

எம்.சுபைதீனுக்கு எதிராக தடை உத்தரவு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரிக்கப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

21 Jan, 2016 | 7:49 pm

அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புதிய செயலாளராக தெரிவு செய்யப்பட்ட எம்.சுபைதீன் அந்த பதவியில் செயற்படுவதற்கு எதிராக தடை உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளரும் தற்போதைய உப தலைவருமான வை.எல்.எஸ்.ஹமீட் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவில் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் உள்ளிட்ட 15 பேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

அண்மையில் கட்சியின் பேராளர் மாநாட்டின்போது புதிய பொது செயலாளர் சட்டவிரோதமான முறையில் நியமிக்கப்பட்டதாகவும் அந்த நியமனத்தை இரத்து செய்து தடை உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறும் மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இன்றைய தினம் இரண்டு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற்கொண்ட மாவட்ட நீதிபதி வழக்கு விசாரணையை மார்ச் மாதம் 23 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்