ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து ஆப்கானிஸ்தானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: 7 பேர் பலி

ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து ஆப்கானிஸ்தானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: 7 பேர் பலி

ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து ஆப்கானிஸ்தானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: 7 பேர் பலி

எழுத்தாளர் Staff Writer

21 Jan, 2016 | 8:56 am

ஆப்கானிஸ்தானின் காபுலில் ஊடகவியலாளர்களை ஏற்றிச் சென்ற காரொன்றின்மீது மேற்கொள்ளப்பட்ட  தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் பாராளுமன்றம் மற்றும் ரஷ்ய தூதரகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் இந்த
தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் முதலாவது 24 மணிநேர செய்தித் தொலைக்காட்சி சேவையொன்றின் ஊடகவியலாளர்கள்
சென்ற காரை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் இரு பெண்களும் அடங்குவதுடன், மேலும் 25 பேர் காயமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தொலைக்காட்சி சேவைக்கு கடந்த வருடம் தலிபான்கள் அச்சுறுத்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் உரிமம் கோரவில்லை என சர்வதேச
தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்