இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கேகாலையில் அதிபரொருவர் கைது

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கேகாலையில் அதிபரொருவர் கைது

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கேகாலையில் அதிபரொருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

21 Jan, 2016 | 1:14 pm

மாணவன் ஒருவனை பாடசாலைக்கு சேர்த்துக் கொள்வதற்கு 60,000 ரூபா பணத்தை இலஞ்சம் பெற்ற அதிபரொருவர் கேகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை பிரிவு பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.

கேகாலை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் குறித்த மாணவனை சேர்த்துக் கொள்வதற்காக 60,000 ரூபா இலஞ்சம் பெற்றுக் கொள்ளப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர்கள் இன்று (21) கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பாடசாலையின் அதிபரும், லிகிதர் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களை கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்