இலங்கையை ஆசியாவின் வர்த்தக கேந்திர நிலையமாக மாற்ற முறையான திட்டம்: பிரதமர்

இலங்கையை ஆசியாவின் வர்த்தக கேந்திர நிலையமாக மாற்ற முறையான திட்டம்: பிரதமர்

இலங்கையை ஆசியாவின் வர்த்தக கேந்திர நிலையமாக மாற்ற முறையான திட்டம்: பிரதமர்

எழுத்தாளர் Bella Dalima

21 Jan, 2016 | 9:43 pm

இலங்கையை ஆசியாவின் வர்த்தக கேந்திர நிலையமாக மாற்றுவதற்கான முறையான திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சுவிட்ஸர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறுகின்ற உலக பொருளாதார மாநாட்டையொட்டி நடைபெற்ற இலங்கை முதலீட்டு மாநாட்டில் உரையாற்றியபோதே பிரதமர் இதனைக் கூறினார்.

சுவிஸ் – ஆசிய வர்த்தக சபை மற்றும் இலங்கை வணிக சபை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இலங்கை முதலீட்டு மாநாட்டில் சர்வதேச மற்றும் இலங்கை பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் வரைபடத்தை தயாரிப்பதற்கான பொறுப்பு முதலீட்டாளர்களிடமே உள்ளதாகவும் அதற்கான வசதிகள் அனைத்தையும் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

முதலீட்டுச் சபை மற்றும் பொருளாதார அபிவிருத்தி சபைக்குப் பதிலாக அபிவிருத்தி முகவர் நிலையமொன்றை ஸ்தாபிக்க எண்ணியுள்ளதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்