கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜெயலலிதா இந்திய பிரதமருக்கு மீண்டும் கடிதம்

இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜெயலலிதா இந்திய பிரதமருக்கு மீண்டும் கடிதம்

இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜெயலலிதா இந்திய பிரதமருக்கு மீண்டும் கடிதம்

எழுத்தாளர் Staff Writer

21 Jan, 2016 | 8:00 am

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் அவர்களுடைய படகுகளையும் விடுவித்துக் கொள்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் கைது செய்யப்பட்ட 6 இந்திய மீனவர்களையும் அவர்களின் 68 படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தி ஹிந்து வெளியிட்டுள்ள 8செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 104 இந்திய மீனவர்கள் பல மாதங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டு, அவர்கள் வீடு திரும்புவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக்கு நீரினையில் மீன்பிடிக்கும் அவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வதாகவும் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான சர்வதேச கடல் எல்லை முடிந்துவிட்ட விடயமல்ல எனவும் தமிழக முதல்வர் பிரமதர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தி ஹிந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கச்சத்தீவு தொடர்பான 1974 மற்றும் 1976ம் ஆண்டு இந்திய – இலங்கை இடையிலான ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்பட வேண்டும் என்பதையும் தமிழக அரசு தன் நிலைப்பாடாக தொடர்ந்து கொண்டுள்ளதாகவும் தமிழக முதலர்வரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்