பாராளுமன்றில் கண்காணிப்புக்குழு ஸ்தாபிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது

பாராளுமன்றில் கண்காணிப்புக்குழு ஸ்தாபிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது

பாராளுமன்றில் கண்காணிப்புக்குழு ஸ்தாபிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

20 Jan, 2016 | 1:02 pm

பாராளுமன்றத்தில் கண்காணிப்புக்குழுவை விரைவில் ஸ்தாபிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கண்காணிப்புக்குழுவிற்காக ஒவ்வொரு கட்சியிலிருந்தும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் கூறியுள்ளார்.

இதற்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் நடவடிக்கைகளை கட்சிகளே மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து அமைச்சுக்களின் செயற்பாடுகள் குறித்து கண்காணிக்கும் பொறுப்பு குறித்த குழுவினருக்கு ஒப்படைக்கப்படவுள்ளது.

பல்வேறு கட்டளைச்சட்டங்கள் உள்ளிட்ட அமைச்சுக்களினால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து ஆராய்வதும் கண்காணிப்பு குழுவின் மற்றுமொறு கடமையாகும்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்