உலகளவில் செல்வச்செழிப்பு இவ்வாறு தான் பரம்பியுள்ளது; அமெரிக்கா முதலிடம்

உலகளவில் செல்வச்செழிப்பு இவ்வாறு தான் பரம்பியுள்ளது; அமெரிக்கா முதலிடம்

உலகளவில் செல்வச்செழிப்பு இவ்வாறு தான் பரம்பியுள்ளது; அமெரிக்கா முதலிடம்

எழுத்தாளர் Staff Writer

20 Jan, 2016 | 12:31 pm

உலக பொருளாதாரம் குறித்து விவாதிக்க உலகத் தலைவர்கள் இந்த வாரம் சுவிஸ்ஸிலுள்ள டாவோஸில் கூடுகின்றனர். இந்த மாநாட்டில் பொருளாதார ஏற்றத் தாழ்வு முக்கியமாக விவாதிக்கப்படும் ஒரு விடயமாக அமையும்.

இச்சூழலில் உலகளவில் செல்வம் எங்கு எப்படி பரவியுள்ளது அது எப்படி மாறிவருகிறது என்பது குறித்த ஒரு பார்வையாக இந்த கட்டுரை வடிவம் பெற்றுள்ளது.

பொருளாதார ஏற்றத் தாழ்வு அதிகரித்து வரும் ஒரு உலகளாவிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது.

ஆண்டுதோறும் கிரெடிட் ஸ்விஸ் எனும் ஸ்விஸ் வங்கி, உலகப் பொருளாதாரம் மற்றும் அது எங்கு எப்படி குவிக்கப்பட்டுள்ளது என்பதை நாடு வாரியாக, பிரதேச வாரியாக ஆய்வு செய்து வெளியிடுகிறது.
உலகின் பெரும்பாலான செல்வம் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவிலேயே குவிந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்ஸிகோ நீங்கலாக உள்ள வட அமெரிக்காவில் உள்ளவர்களின் சராசரி சொத்து மதிப்பு 342,000 டொலர் என அந்த வங்கி கணக்கிட்டுள்ளது.

அனைத்து மக்களதும் நிகர சொத்தினது பெறுமதியே இந்த அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் காணப்படுபவர்களினது சொத்து மதிப்பு உலகின் இதர நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகமிக அதிகம். உதாரணமாக ஆபிரிக்கா அல்லது இந்தியாவிலுள்ள ஒருவரின் சராசரி சொத்து மதிப்பைவிட 75 மடங்கு அதிகமானது.

அதேபோல் சீனா மற்றும் லத்தீன் அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது இது 15 மடங்கு அதிகம். ஐரோப்பிய அளவுகோலை ஒப்பிடும்போது கூட, அமெரிக்கா மற்றும் கனடாவிலுள்ளவர்கள் 2.5 மடங்கு அதிக சொத்துக்களைக் கொண்டுள்ளனர்

எனினும் அமெரிக்க டொலரிலேயே இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எனினும் இந்த மதிப்பீட்டின் மூலமாக நேர்த்தியான முடிவுகளைப் பெற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் ஒருவரிடம் காணப்படும் சொத்து அளவினைக் கொண்டு அந்த நபரால் வாங்கப்படும் பொருட்களின் அல்லது சேவைகளின் தரமானது அனைத்து நாடுகளிலும் சமமானதாக காணப்படாது. ஒரு நாட்டில் குறித்த தரத்துடனான பொருளை வாங்க செலவிடும் தொகையைக் கொண்ட அதே தரத்திலான பொருட்களை வேறு நாடுகளிலும் பெற்றுக்கொள்ள முடியாது.

அத்துடன் சொத்து மதிப்பீட்டில் வீடு அல்லது நிலம் என்பது மிக முக்கியமான ஒரு அம்சமாக இருப்பதால், ஒவ்வொரு நாட்டிலும் நிலம் மற்றும் வீடுகளின் மதிப்பு மாறுபடும். இதனால் ஏற்றத்தாழ்வுகளில் பெரிய வித்தியாசங்கள் தெரியும்.

இப்படியான பல காரணங்களால், இந்த அறிக்கையின் நேரத்தியானது கேள்விக்குறியாகியுள்ளது.

1 அமெரிக்கா 20,680,000 ( 2014ஆம் ஆண்டை விட 15% அதிகம்
2 பிரிட்டன் 3,623,000 ( 2014ஆம் ஆண்டை விட 25% அதிகம்)
3 ஜப்பான் 3,417,000 ( 2014ஆம் ஆண்டை விட 15% குறைவு)
4 பிரான்ஸ் 2,762,000 ( 2014ஆம் ஆண்டை விட 22% குறைவு)
5 ஜெர்மனி 2,281,000 ( 2014ஆம் ஆண்டை விட 17% குறைவு)
6 சீனா 1,885,000 ( 2014ஆம் ஆண்டை விட 19% அதிகம்)
7 இத்தாலி 1,714,000 ( 2014ஆம் ஆண்டை விட 25% குறைவு)
8 கனடா 1,500,000 ( 2014ஆம் ஆண்டை விட 7% குறைவு)
9 அவுஸ்திரேலியா 1,480,000 ( 2014ஆம் ஆண்டை விட 17% குறைவு)
10 சுவிட்சர்லாந்து 831,000 ( 2014ஆம் ஆண்டை விட 3% அதிகம்)

இந்தப் புள்ளி விபரங்களைப் பார்க்கும்போது சீனா, வட அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது புலனாகின்றது.

அதே நேரம் ஐரோப்பா, ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.

சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் கூடுதலான பெரும் பணக்காரர்களை உருவாக்கியுள்ளது அல்லது பெரும் கோடீஸ்வரர்கள் லண்டன் அல்லது நியூயார்க்கில் தமது செல்வத்தை கொண்டு சென்று அதன் மூலம் பயனடைகிறார்கள் என்பது இந்த ஆய்வின் மூலம் தெளிவாகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்