நடிகை அசினுக்கும் மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனருக்கும் திருமணம் நடைபெற்றது

நடிகை அசினுக்கும் மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனருக்கும் திருமணம் நடைபெற்றது

நடிகை அசினுக்கும் மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனருக்கும் திருமணம் நடைபெற்றது

எழுத்தாளர் Bella Dalima

19 Jan, 2016 | 3:53 pm

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவிற்கும் (36) நடிகை அசினுக்கும் (29) டெல்லியில் கிறிஸ்தவ முறைப்படி இன்று திருமணம் நடைபெற்றது.

இன்று மாலை இந்து முறைப்படி திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு மணமக்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஜனவரி 23 ஆம் திகதி மும்பையில் திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது.

இதில் பொலிவுட் மற்றும் தென்னிந்தியத் திரை நட்சத்திரங்கள் பெருமளவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்